பொது செய்தி

தமிழ்நாடு

துணை தேர்வர்கள் ஹால்டிக்கெட் இணையதளத்தில்

Added : செப் 14, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு துணை தேர்வர்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020 தனிதேர்வர்கள் தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சி.இ.ஓ., முனுசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு :இந்த மாதம் மட்டுமின்றி அக்டோபர் மாதமும் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு துணை தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனி தேர்வர்களும் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுகூட நுழைவு சீட்டுகளை நாளை 15ம் தேதி பிற்பகல் முதல் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முதலில் 'HALL TICKET' என்ற வாசகத்தை 'Click' செய்ததும், தோன்றும் பக்கத்தில் உள்ள 'HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD' என்ற வாசகத்தை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) நிரந்தர பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியை (Date of birth), பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதே போல், கடந்த மார்ச் 26ம் தேதி நடைபெறாமல் ரத்து செய்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் (புதிய மற்றும் பழைய பாடதிட்டம்) மற்றும் தொழிற்கல்வி கணக்கு பதிவியல் (பழைய பாடதிட்டம்) பாடங்களுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வை எழுத ஏற்கனவே விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் தற்போது செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020ல் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணை தேர்வு எழுதுவதற்கான தேர்வக்கூட நுழைவு சீட்டுகளை வரும் 15ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) துணை தேர்வுகள் இரண்டையும் எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவு சீட்டு மட்டும் வழங்கப்படும்.மேலும், விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், விழுப்புரம், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X