பொது செய்தி

தமிழ்நாடு

இரு மாவட்டங்களில் துணை தேர்வு எழுதவுள்ளமாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா பரிசோதனை

Added : செப் 14, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் துணை தேர்வுகள் எழுதவுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் கொரோனா 19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு :இந்த மாதம் மற்றும் அக்டோபர் 2020ல் நடைபெறவுள்ள முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, பத்தாம் வகுப்பு துணை தேர்வுகள், 8 ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான தேர்வு மற்றும் தொடக்க கல்வி பட்டய தேர்வுகளை எழுதவுள்ள மாற்று திறனாளி தேர்வர்கள், சொல்வதை எழுதுவோர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்று திறனாளி தேர்வர்கள் தேர்வு, எழுதுவதற்கு முன், கொரோனா 19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.வரும் 21ம் தேதி முதல் அக்., 7 ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வுகளுக்காக, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டங்களில் அமைக்கபட்டுள்ள தேர்வு மையங்களில், தேர்வுகளை எழுதவுள்ள மாற்று திறனாளி தேர்வர்கள், சொல்வதை எழுதுவோர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்று திறனாளி தேர்வர்கள், தேர்வெழுதுவதற்கு நான்கு நாட்களுக்கு முன், தங்கள் அளவிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.இதில், ஏதேனும் சிரமம் இருந்தால் விழுப்புரம், திண்டிவனம் மற்றும் செஞ்சி கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், தேர்வெழுதவுள்ள மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மொபைல் எண் 94430 10832 ஆகியவற்றிலும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ள மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மொபைல் எண் 98420 51698 எண்ணிற்கும், வரும் 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு தெரிவித்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.சொல்வதை எழுதுவோர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்று திறனாளி தேர்வர்கள் கொரோனா 19 தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றை தேர்வு மையத்திற்கு வரும் போது, உடன் எடுத்து வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X