சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சைக்கிள் - பைக் மோதல் ஒருவர் பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலம் அருகே சைக்கிளில் சென்ற சிறுமி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி அன்பரசி,34; இவரது மகள் தரண்யா, ௧௨. இவர் தனது தந்தை வீட்டில் தங்கி, ஆத்துார் அடுத்த பெரியேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் தரண்யா தனது தாத்தா நிலத்தில் இருந்து வீட்டிற்கு கல்லாநத்தம் - மேல்நாரியப்பனுார் செல்லும் ரோட்டில் சைக்கிளில் சென்றுள்ளார்.அப்போது இவருக்கு எதிர் திசையில் டிஎன்15 கியூ4502 என்ற பதிவெண் கொண்ட ஹூரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கை பூசப்பாடி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஐயப்பன்,35; என்பவர் அஜாக்ரதையாக ஓட்டி சென்று தரண்யா மீது மோதியுள்ளார்.இதில் இருவரும் படுகாயமடைந்தனர். தரண்யாவை கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கும், ஐயப்பனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் மாலை ஐயப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X