சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்ற 5 பேர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்த செளந்தரராஜன் மனைவி பவுனு, 30; ஆறுமுகம் மனைவி விஜியா, 47; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.வடமருதுார் கிராமத்தில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த முத்தையன் மகன் பாபு, 36; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று எடப்பாளையம் பகுதியில் ரோந்து சேன்ற போது அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பஷிர் மகன் கலில், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று சேமங்கலம் பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அஞ்சாபுலி மகன் மணிகன்டன், 38; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X