சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ - பைக் மோதல்எலக்ட்ரீசியன் பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே ஆட்டோ - பைக் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த மையனுார் கிராமத்தை சேர்ந்த தேவதாஸ் மகன் ராஜரத்தினம்,34, எலக்ட்ரீசியன்; இவர் கிளாமர் பைக்கில் பகண்டைகூட்ரோட்டில் இருந்து மையனுார் நோக்கி நேற்று மதியம் சென்றுள்ளார்.பெரியபகண்டை அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிஎண்15யு4597 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோ ராஜரத்தினம் மீதுமோதி விபத்துக்குள்ளானது. இதில் முன்பக்க டயரில் சிக்கிய ராஜரத்தினம், சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X