சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய இரண்டுமாட்டு வண்டி பறிமுதல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருவெண்ணெய் நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய இரண்டு மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தி வருவதாக பேலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு போலீசாரை கண்டதும் மணல் கடத்தியவர்கள் வண்டியை விட்டுவிட்டு தப்பியோடினர். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X