சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன் மாயம்: மனைவி புகார்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; பெருவங்கூரில் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரை சேர்ந்தவர் தங்கராசு மகன் மாயி,23; இவருக்கும் கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த நித்யா,21; என்பவருக்கும் கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாயி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த நித்யா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர் நண்பர்கள் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நித்யா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X