பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 9,441 ஆக அதிகரிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 128 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் பாதிப்பு 9,441 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 9,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 85 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 880 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 9,441 ஆக உயர்ந்துள்ளது.இதில், தொற்று பாதித்த செஞ்சியை சேர்ந்த 60 வயது பெண்., மேல்சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த 73 வயது முதியவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என 3 பேர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தனர்.

இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக 1,063 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.இதுவரை 8,474 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X