இந்தியா

சான்றிதழ் பெற வரும் மாணவர்கள் அலைக்கழிப்பு தி.மு.க., துணை அமைப்பாளர் குற்றச்சாட்டு

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'தாசில்தார் அலுவலகங்களில் சான்றிதழ் பெற செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைகழிக்கப்படுகின்றனர்' என தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:பள்ளி மற்றும் உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு குடியிருப்பு, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள் தாசில்தார் அலுவலகங்களுக்கு செல்லும் போது பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றனர்.இதுபோன்ற நிலையில், கடந்த 1ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர்கள் 13 பேரை பணியிட மாற்றம் செய்தும், அவர்களில் பலர் இதுவரை மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு பணிக்கு செல்லவில்லை. இதனால் மாணவர்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்றால், அங்குள்ள அதிகாரிகளும் ,ஊழியர்களும் 'சான்றிதழ் நேரடியாக தருவதில்லை. ஆன்லைன் மூலமாகத்தான் விண்ணப்பித்து பெற வேண்டும்' என கூறி அனுப்பி விடுகின்றனர்.பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் போது, தேவையாள ஆவணங்களை முழுமையாக கேட்டு பெறுவதில்லை. இதனால் கட்டணம் கட்டி அங்கு விண்ணப்பித்தும் சான்றிதழ் கிடைக்காமல் பெற்றோர்களும் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, தாசில்தார் அலுவலகத்திலேயே நேரடியாக சான்றிதழ்கள் வழங்கும் பணியை மீண்டும் தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X