சண்டே மார்க்கெட்டில் கடை திறக்க முயன்ற வியாபாரிகள் கைது| Dinamalar

இந்தியா

சண்டே மார்க்கெட்டில் கடை திறக்க முயன்ற வியாபாரிகள் கைது

Added : செப் 14, 2020
Share

புதுச்சேரி; தடையை மீறி சண்டே மார்க்கெட்டில் கடைகளை திறக்க முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட சண்டே மார்க்கெட் மீண்டும் இயங்க அரசு அனுமதி கோரி, நேற்று ஏ.ஐ.டி.யு.சி., சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர்கள் சங்கம் சார்பில், அமுதசுரபி எதிரில் கடை வைத்து வியாபாரம் செய்யும் போராட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொது செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் 70க்கும் மேற்பட்ட சண்டே மார்க்கெட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.பெரியக்கடை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வருவாய் இழந்துள்ள சண்டே மார்க்கெட் வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்என கோரிக்கை விடுத்தனர்.தடையை மீறி கடையை திறக்க முயற்சித்ததால் 6 பெண்கள் உட்பட 32 சண்டே மார்க்கெட் வியாபாரிகளை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X