இந்தியா

புதிதாக 388 பேருக்கு தொற்று; 15 பேர் பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 4,024 பரிசோதனை செய்யப்பட்டதில் 388 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தனர்.

சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் கூறிய தாவது:புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 4,024 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 291, காரைக்கால் -58, ஏனாம் 38, மாகி - 1 என மொத்தம் 388 பேருக்கு தொற்று இருப்பது கண்ட றியப்பட்டது. 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 385ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக உள்ளது.மாநிலம் முழுதும் இதுவரை 19,821 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நேற்று மட்டும் புதுச்சேரியில் 280 பேர், காரைக் கால் - 23, ஏனாம் - 32 பேர், மாகியில் 7 பேர் என மொத்தம் 342 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.3,160 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,696 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 99,480 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 77,060 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X