இந்தியா

பாசிக்-பாப்ஸ்கோ ஊழியர்கள் பிச்சையெடுக்கும் போராட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நிலுவை சம்பளத்தை வழங்க கோரி பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவை சம்பளத்தை வழங்க கோரியும், மூடப்பட்டுள்ள நிறுவனங்களை திறக்க வலியுறுத்தியும், ஏ.ஐ.டி.யு.சி., பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனை கண்டித்து, கடந்த 10ம் தேதி முதல் சட்டசபை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பாப்ஸ்கோ சங்கத் தலைவர் ராஜி, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொது செயலாளர் செல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X