பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அருகே, மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் வீடுகளுக்கே சென்று, பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, பாண்டூர், விளாகம், நெரும்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ - -மாணவியர் படிக்கின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டில் முடங்கி, கல்வி தடைபட்டது. இதையடுத்து, அவர்களின் நலன் கருதி, படிப்பை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவினர், மாணவ - -மாணவியரின் வீடுக்கு சென்று, பாடம் நடத்துகின்றனர்.

மாணவர்கள் சேர்க்கை, கல்வி தொலைக்காட்சி, வங்கி கணக்கு துவங்குதல், பாடத்தில் உள்ள சந்தேகங்களை விளக்குதல், மாணவர்களின் உடல் நலம் கவனித்தல், மாணவர்கள் படிக்கும் நேரத்தை அறிதல் என, கல்வி பணி ஆற்றுகின்றனர்.மேலும், மாணவர்களின் நிலைபாட்டை அறிய, பெற்றோரின் மொபைல் எண் பெற்று, 'மாணவர்கள் படிப்புக்கு, அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறோம்' என, எடுத்துக் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-202007:14:06 IST Report Abuse
Bhaskaran மற்ற வாத்தியாருங்க கிட்டே திட்டு வாங்க போறாங்க .( சும்மா தண்ட சம்பளத்தை வாங்கிகிட்டு வீட்டில் சீரியல் பார்த்து கிட்டு இருக்காமல் இது எதுக்குவேண்டாத வேலை என்று மற்ற வாத்தியார்கள் புலம்பறது கேட்கிறது )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X