சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்ற இழுபறி; மணமையில் உண்ணாவிரதம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மணமையில், பாதை ஆக்கிரமிப்பு அகற்றுவதில், வருவாய், வட்டார வளர்ச்சி நிர்வாகங்களின் இழுபறியை கண்டித்து, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, மணமை ஊராட்சியில், சிவராஜபுரம் உள்ளது. இப்பகுதியில், குன்னத்துார் பிரதான சாலையுடன், வசிப்பிட பகுதி இணைப்பு பாதை, மண் பாதையாக இருந்தது.ஊராட்சி நிர்வாகம், பல ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் சாலையாக மேம்படுத்த முயன்றபோது, பாதையின் குறிப்பிட்ட பகுதி, தனியாருக்கு உரியதாக, வழக்குத் தொடரப்பட்டது. எனவே, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சாலை அமைத்து, சர்ச்சை பகுதியில் தவிர்க்கப்பட்டது.

இச்சூழலில், தனியார் வழக்கை, சில மாதங்களுக்கு முன், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி, தடைபட்ட பகுதியிலும் சாலை அமைக்க, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்ற, வருவாய், வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள் இடையே, இழுபறி நீடிக்கிறது. இதை கண்டித்தும், சாலை அமைக்க வலியுறுத்தியும், பொதுமக்கள் நேற்று, உண்ணாவிரதம் இருந்தனர்.வருவாய், ஊராட்சித் துறையினர், அவர்களிடம் பேசி, ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்ததை ஏற்று, அவர்கள் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X