சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : செப் 14, 2020
Share
Advertisement

கல்குவாரி திருடர்கள் பிடிபட்டனர்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வடமங்கலம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான, எட்டுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்குகின்றன. இவற்றில், தினமும் வசூலாகும் பணம், அதே பகுதி லாக்கரில் இருப்பு வைப்பது வழக்கம்.இந்நிலையில், இம்மாதம், 8ம் தேதி அதிகாலை, கத்தியுடன் சென்ற கும்பல், கல்குவாரியில் இருந்த காசாளரை மிரட்டி, லாக்கரில் இருந்த, 6.48 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச்சென்றனர்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கல்குவாரியில் பணியாற்றிய, முன்னாள் ஊழியர் கொடுத்த தகவலின்படி கொள்ளை நடந்தது தெரிந்தது.இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட, திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பத்தைச் சேர்ந்த கோவர்தனன், 23, மகாராஜன், 22, அன்சார் சரீப், 23, உட்பட, 11 பேரை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.

கடலில் மாயமானோர் இறப்பு

மாமல்லபுரம்: சென்னை, கோடம்பாக்கம், காமராஜர் நகர் பகுதி, இரு குடும்பத்தினர், நேற்று முன்தினம் காலை, மாமல்லபுரம் சுற்றுலா வர, வேனில் வந்தனர். தெற்குப்பட்டு பகுதியில், வாகனம் நிறுத்தி, கடலில் குளித்தனர்.அப்போது, முருகன் என்பவர் மகன் ஹரிஹர விக்னேஷ், 17, வடபழனி, தனியார் கல்லுாரி, பி.காம்., முதலாம் ஆண்டு மாணவர்; சாது என்பவர் மகன் ஆகாஷ், 15, அரசுப் பள்ளி, 10ம் வகுப்பு மாணவர், கடலில் மூழ்கி, மாயமாகினர்.இந்நிலையில், நேற்று காலை, ஹரிஹர விக்னேஷ் உடல், கோவளம் கடற்கரையில் ஒதுங்கியது. இதே பகுதி கடலில், ஆகாஷ் உடல் மிதந்தது, மீனவர் உதவியுடன், உடல் மீட்கப்பட்டது. மாமல்லபுரம் போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X