இந்தியா

மாணவர்களின் மரணத்திற்கு காங்., திமுக பொறுப்பேற்க வேண்டும்:அன்பழகன் குற்றச்சாட்டு

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'மாணவர்களின் மரணத்திற்கு காங்.,- தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும்' என அன்பழகன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நீட் தேர்வை மையப்படுத்தி காங்., - தி.மு.க., கீழ்த்தரமான அரசியலை செய்து வருகின்றன. க்ஷ
ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், மத்தியில் காங்., - தி.மு.க, கூட்டணி ஆட்சியில், 2012ம் ஆண்டில் நீட் தேர்வை பார்லிமெண்ட்டில் சட்டமாக கொண்டு வந்தனர்.நீட் தேர்வை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீட் தேர்விற்கு ஆதரவாக, மத்திய அரசின் சார்பில் காங்., கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி ஆஜரானார்.பல கட்டங்களில் நீட் தேர்வை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வரும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் கேட்பது மாணவ, மாணவிகளை ஏமாற்றும் செயல். நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவ, மாணவிகளின் மரணத்திற்கு, நீட் தேர்வை கொண்டு வந்த காங்., - தி.மு.க.,தான் பொறுப்பேற்க வேண்டும்.மாநிலத்தின் முதல்வர் என்ற பொறுப்புணர்ந்து, நாராயணசாமியின் செயல்பாடு இருக்க வேண்டும். இருக்கும் கொஞ்சம் கால ஆட்சியிலாவது, வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X