பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்....

Added : செப் 14, 2020
Share
Advertisement

வண்டலுார் பாலப்பணி ஆய்வு

வண்டலுார்: சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்கா அருகில், 55 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலப் பணி, மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.மந்தமாக பணி நடந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது, மேம்பாலப் பணி தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது.இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ், எஸ்.பி., கண்ணன் ஆகியோர், நேற்று, மேம்பால பணிகளை ஆய்வு செய்தனர்.

வீடு கட்ட அனுமதி வழங்கல்

உத்திரமேரூர்: தமிழக அரசின், பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு உத்திரமேரூர் ஒன்றியத்தில், சிறுபினாயூர், பென்னலுார், தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 26 பழங்குடியினர் தேர்வு செய்யப்பட்டனர்.இத்திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி ஆணையை, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார்,ஒவ்வொரு பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, நேற்று வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X