இந்தியா

முத்தியால்பேட்டையில் முடிவுகள் உடனடியாக அறிவிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முத்தியால்பேட்டையில் 'ரேபிட் டெஸ்ட் கிட்' மூலம் அதிவேக கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

முத்தியால்பேட்டை தொகுதியில் கொரோனா தொற்று அதிகம் பரவும் பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவித்தால்தான் தொற்று பரவலை தடுக்க முடியும் என அரசிடம் வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.இதனையடுத்து, சுகாதாரத்துறை, ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து, முத்தியால்பேட்டையில் 'ரேபிட் டெஸ்ட் கிட்' என்ற அதிவேக கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, முத்தியால்பேட்டை எம்.எல்,ஏ., அலுவலகத்தில் நேற்று காலை 9.௦௦ மணி முதல் மதியம் 1.௦௦ மணி வரை பரிசோதனை முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார்.சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்தனர். இதன் முடிவுகள் அரை மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது.சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் இருந்த 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X