இந்தியா

சாலை அமைக்கும் பணி நிறுத்தம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம்; காட்டேரிக்குப்பம் பள்ளி வாசல் வீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காட்டேரிக்குப்பம் காலனி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், 45 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டது.அப்பகுதியின் அனைத்து வீதிகளிலும், சிமென்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, பள்ளிவாசல் வீதியில் மட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. பணி நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், மீண்டும் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, காட்டேரிக்குப்பம் காலனி பள்ளி வாசல் வீதியில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி விரைவில் துவக்கி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X