இந்தியா

691 சாக்கு பைகளை விற்ற ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ரேஷன் சாக்கு பைகளை அனுமதியின்றி விற்ற ரேஷன் கடை ஊழியர்கள் மீது குடிமைப்பொருள் வழங்கல் துறை புகார் அளித்துள்ளது.

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை நுகர்வோர் அதிகாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள், கருவடிகுப்பம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அவ்வழியாக டி.வி.எஸ். எக்ஸ்.எல்., மொபட்டில் சாக்கு பைகளுடன் வந்த வியாபாரியை நிறுத்தி விசாரித்தனர். அவர், குயவர்பாளையம் கருணாகர பிள்ளை வீதியை சேர்ந்த பாலசுந்தரம், 60, என்பதும், ரேஷன் அரிசி வினியோகிக்கப்பட்ட அரசு முத்திரை பதித்த சாக்கு பைகளை எடுத்துச் செல்வது தெரிய வந்தது.விசாரணையில், கொரோனா நிவாரணமாக மத்திய அரசு வழங்கிய ரேஷன் அரிசி, கொண்டை கடலை வினியோகிக்கும் பள்ளியில் இருந்து 691 சாக்கு பைகளை விலை கொடுத்து வாங்கி செல்வதாக தெரிவித்தார். அரசு முத்திரையிட்ட சாக்கு பைகளில் உள்ள பொருட்களை வினியோகித்த பிறகு, உரிய அனுமதிக்கு பிறகே அவை விற்கப்பட வேண்டும் என்பதால், இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் மீது லாஸ்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ரேஷன் கடை ஊழியர்கள் மூவர் சாக்கு பைகளை விற்றது தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X