கூடுவாஞ்சேரி: சென்னை, கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம், 82. இவருக்கு, நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில் அவரை, மகன் வெங்கடேசன் வீட்டில், வைத்து பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், கூடுவாஞ்சேரி அடுத்த, காயரம்பேடு தனியார் முதியோர் இல்லத்தில், இம்மாதம், 10ம் தேதி, தணிகாசலத்தை, அவரது மகன் சேர்த்தார். இதனால், மனமுடைந்த முதியவர், நேற்று, துாக்கிட்டு இறந்தார். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE