இந்தியா

பிரதமர் நிதியுதவி திட்ட பயனாளிகள்: ஆய்வு செய்ய கோரிக்கை

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் புதுச்சேரியில் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்' என முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:அண்டை மாநிலமான தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரி மாநிலத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில், கிசான் திட்டத்தில் வழங்கப்பட்ட பணம் உண்மையான விவசாயிகளுக்கு கிடைத்ததா என்பதை உறுதி செய்ய, கவர்னர், முதல்வர், வேளாண் அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக மத்திய - மாநில அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அரிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் கிசான் திட்டத்தில் எத்தனை விவசாயிகள் பயனடைந்தனர் என்பதை மாநில அரசு தெரியப்படுத்த வேண்டும்.உண்மையான விவசாயிகள் சேர்க்கப்படாமல் இருந்தால், அவர்களை கண்டறிந்து இத்திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X