இந்தியா

தொழிலதிபர் மகனிடம் ரூ.3 லட்சம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; தொழிலதிபர் மகனிடம் 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி சுத்திமணி மீது டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.ரெட்டியார்பாளையம் அந்தோணியார் கோவில் வீதி அனு அவென்யூ அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர் மேரி ஜான் அமலோர்.48; தொழிலதிபர். இவரது மகன் ஜோசப் பிரான்சிஸ் பேட்ரிக்,27. பட்டதாரியான இவர், குடும்ப சொத்தை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் விற்றார். அதை எதிர்த்து, குத்தகைதாரர்கள் என்று சொல்லி இருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.கடந்த 11ம் தேதி மதியம் 2.45 மணியளவில், புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்த பேட்ரிக்கின் மொபைல் போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, 'நான் ரவுடி சுத்திமணி பேசுகிறேன். என் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. எனக்கு 3 லட்சம் ரூபாய் பணம் வேண்டும்' என கூறி உள்ளார்.பேட்ரிக், 'நீங்கள் யார். நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும்' என கேட்டுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், 'யார் யாருக்கோ பணம் தருகிறாய். நான் கேட்டால் பணம் கொடுக்க மாட்டாயா' என மிரட்டி உள்ளார்.இதுகுறித்து டி.நகர் போலீசில் பேட்ரிக் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், பேட்ரிக்கை மிரட்டியது, முதலியார்பேட்டைடைய சேர்ந்த பிரபல ரவுடி சுத்திமணி என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X