இந்தியா

கதர் வாரிய அதிகாரி கொலை வழக்கில் 6 பேர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கதர் வாரிய அதிகாரி கொலை வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஆர்.காங்., பிரமுகர் கொலைக்கு, பழிக்கு பழியாக அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சின்னையாபுரம், சின்ன கிணற்று வீதியைச் சேர்ந்தவர் கணேசன், 54. கதர் வாரிய துணை முதன்மை செயல் அதிகாரி. காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணனின் ஆதரவாளர். கடந்த 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு, வாழைக்குளம் பழனி கிராமணி தோட்டம் அருகே, ஒரு கும்பல் கணேசனை வெட்டி கொலை செய்தது. கொலை தொடர்பாக, வைத்திக்குப்பத்தை சேர்ந்த செந்தில், 36, உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் இருந்து, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சஜித்திடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.சஜித் தலைமையிலான போலீசார், செந்தில்,36, முத்தியால்பேட்டை வாழைக்குளம், பழனி கிராமணி தோட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ், 33. அரவிந்த், 29. முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் அஜய், 28, கொலைக்கு உதவிய குருசுக்குப்பம் ஜான், 28. சின்னையாபுரம் ஆர்.கே. தோட்டம் ஆனந்து, 38, ஆகியோரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 6 பேரும், கொரோனா பரிசோதனைக்காக ஜிப்மரில் அனுமதிப்பட்டனர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததும், 6 பேரும் நேற்று முறைப்படி கைது செய்யப்பட்டனர்.கொலைக்கான காரணம்அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், செந்திலின் மாமா சின்னையாபுரத்தை சேர்ந்த என்.ஆர்.காங்., பிரமுகரான நாகராஜ், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, கொலை செய்யப்பட்டார். இதற்கு, மூல காரணமாக கணேசன் செயல்பட்டுள்ளார். நாகராஜின் 2ம் ஆண்டு நினைவு நாள், சில நாட்களுக்கு முன்பு அனுசரிக்கப்பட்டது. அப்போது, நாகராஜ் கொலைக்கு பழிக்கு பழியாக கணேசனை கொலை செய்ய திட்டமிட்டு, வெட்டி கொலை செய்ததாக கூறி உள்ளனர்.கொலைக்கு பயன்படுத்திய கத்தி, மோட்டார் சைக்கிள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.6 பேரும், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X