இந்தியா

வாலிபருக்கு சரமாரி கத்திவெட்டு

Added : செப் 14, 2020
Share
Advertisement

வில்லியனுார்; வில்லியனுார் அருகே, டீக்கடையில் நின்றிருந்த வாலிபரை மர்ம கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி, தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி, உருளையன்பேட்டை முல்லை நகரை சேர்ந்தவர் ஷேக் உசேன் மகன் ஷாகுல் ஹமீது, 27. இவர் வில்லியனுார் அடுத்த வி.மணவெளியில் உள்ள நண்பர் திவ்யநாதனை பார்க்க, நேற்று மதியம் 12:30 மணியளவில் வந்தார்.நண்பர் வீட்டில் இல்லாததால், ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பில் உள்ள டீக்கடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு மோட்டார் பைக்கில் வந்த மூவர், திடீரென ஷாகுல் ஹமீதை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச் சென்றனர். இதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஷாகுல் ஹமீதை அங்கிருந்தவர்கள் மீட்டு வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டு காயமடைந்த ஷாகுல் ஹமீதுக்கு முதலுதவி அளித்து புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம கும்பல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X