இந்தியா

ரூ.3.39 கோடி : தடயவியல் ஆய்வகத்தை மேம்படுத்த... பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடு

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் தடய அறிவியல் ஆய்வகத்தை மேம்படுத்தும் வகையில், 3.39 கோடி ரூபாய் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுச்சேரியில், கடந்த 2013ம் ஆண்டு, 3.65 கோடி ரூபாய் செலவில் தடயவியல் ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டு, கிருமாம்பாக்கத்தில் இயங்கி வருகின்றது.அறிவியல் துறையின் முன்னேற்றத்தை பயன்படுத்தி, குற்றப் பின்னணிகளைக் கண்டறிவதில், தடய அறிவியல் ஆய்வகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்த தடய அறிவியல் ஆய்வக பிரிவில் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. பாரன்சிக் பயாலஜி செரோலாஜிஸ்ட் பிரிவு மட்டுமே செயல்படுகின்றது. திருட்டு, துன்புறுத்துதல், கற்பழிப்பு போன்ற குற்றங்களில், உடலில் ஏற்பட்ட காயங்களை தடயங்களாக வைத்து உண்மையைக் கண்டறிதல் என்ற முறை உள்ளது.கோர்ட் உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்ட ரத்த கறை படிந்த பொருட்கள், ஆவணங்களை இந்த ஆய்வகத்திற்கு அனுப்பி, அதன் முடிவுகள் பெறப்படுகின்றது.இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தடய அறிவியல் ஆய்வக பிரிவினை, 6.79 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த செயல்திட்டம் தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி அரசு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெண்கள் பாதுகாப்பு பிரிவு தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.முதற்கட்டமாக, 3.39 கோடி ரூபாய் 'நிர்பயா' நிதியுதவி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம், புதுச்சேரி தடயவியல் ஆய்வகத்தில், டி.என்.ஏ., யூனி, கெமிக்கல் யூனிட், இயற்பியல் அறிவியல் ஆகிய பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.டி.என்.ஏ., யூனிட்கற்பழிப்பு வழக்குகளில் டி.என்.ஏ., ஆய்வு செய்யும் வசதி புதுச்சேரியில் இல்லை. பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு அனுப்பி, முடிவுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இனி, புதுச்சேரியிலேயே டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனையை மேற்கொள்ள முடியும்.கெமிக்கல் யூனிட்மனித உடலில் இருக்கும் வேதியியல் மற்றும் விஷத்தன்மை உள்ள பொருட்களை கண்டறிய, கோரிமேட்டில் மத்திய ஆய்வகம் செயல்படுகின்றது. தடயவியல் ஆய்வகத்தில் ரசாயன ஆய்வக பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளதால், இனி இச்சோதனையை இங்கேயே நடத்தி, விரைவில் முடிவினை தெரிந்து கொள்ள முடியும். எந்த வகையான போதை பொருட்கள், ரசாயன பொருட்கள் பற்றியும் இங்கேயே அறிந்து கொள்ள முடியும்.

இயற்பியல் அறிவியல் ஆய்வகம்ஆவணங்களில் உள்ள கையெழுத்து மீது சந்தேகம் எழும்போது, ஐதராபாத் போன்ற பெரு நகரில் உள்ள ஆய்வகத்தின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடி வருகின்றனர். இனி ஆவணங்களின் உண்மை தன்மையை புதுச்சேரியிலேயே சோதித்துக் கொள்ள முடியும். சைபர் குற்றங்களை கண்டறியும் பணியும் இங்கு ஆரம்பிக்கப்பட உள்ளது.மாநில போலீசாருக்கு கைகொடுக்கும் வகையில், தடயவியல் ஆய்வகத்தை மேம்படுத்தும் பணிகள் முடுக்கிவிட உள்துறை திட்ட மிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X