இந்தியா

'எளிமையாகவே இருந்தது நீட் தேர்வு' : 7,000 மாணவ, மாணவிகள் எழுதினர்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 'எளிமையாகவே இருந்தது நீட் தேர்வு' : 7,000 மாணவ, மாணவிகள் எழுதினர்

புதுச்சேரி; புதுச்சேரியில் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதினர்.இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுதும் 3,842 மையங்களில் நேற்று நடந்தது.

15 லட்சத்து 97 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். புதுச்சேரியில், 15 மையங்களில், 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு மைய வளாகம் மற்றும் தேர்வறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.சமூக இடைவெளியில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். ஒரு அறையில் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 11.௦௦ முதல் மதியம் 1.00 மணி வரை, தேர்வு மையங்களுக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

பிற்பகல் 2.௦௦ மணி முதல் மாலை 5.௦௦ மணி வரை தேர்வு நடந்தது.நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், 'மாநில பாடத்திட்டத்தில் இருந்து 20 முதல் 30 சதவீத கேள்விகளும், பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டு இருந்தன. தாவரவியல், உயிரியல், வேதியியல் பாட கேள்விகள் எளிதாக இருந்தன. இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த முறை நீட் தேர்வு எளிதாகவே இருந்தது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X