இந்தியா

பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டுகளை இணையதளத்தில் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குனர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) தங்களின் தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டுகளை நாளை 15ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.26.03.2020 அன்று நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம்), தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) பாடங்களுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும், தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டுகளை நாளை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 1 அரியர் மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வுகள் இரண்டையும் எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X