தமிழ்நாடு

திருவள்ளூரில் 308 பேருக்கு பாதிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று, 308 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 28 ஆயிரத்து, 325ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 28 ஆயிரத்து, 17 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. நேற்று, 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை, 28 ஆயிரத்து, 325ஆக உயர்ந்தது.இதுவரை, 25 ஆயிரத்து, 762 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 476 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 2,087 பேர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டில் 299

செங்கல்பட்டு மாவட்டத்தில், 30 ஆயிரத்து 062 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 27 ஆயிரத்து, 898 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.இந்நிலையில், தாம்பரம் - 71, பல்லாவரம் -- 70, செங்கல்பட்டு - 52, வண்டலுார் - 44, திருப்போரூர் - 29, திருக்கழுக்குன்றம் - 15, மதுராந்தகம் - 12, செய்யூர் - ஆறு என, மொத்தம், 299 பேர், நேற்று பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேர் என, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 30 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, கொரோனா நோயாளிகள், ஆறு பேர் நேற்று, இறந்தனர். இதுவரை, 481 பேர் இறந்துள்ளனர்.

காஞ்சியில் 89

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று புதிதாக, 89 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகிஉள்ளது.காஞ்சிபுரம் நகராட்சியில் - 18, குன்றத்துார் - 33, ஸ்ரீபெரும்புதுார் - 16, வாலாஜாபாத் - 13, காஞ்சிபுரம் - எட்டு, உத்திரமேரூர் தாலுகாவில் - ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 18 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X