இந்தியா

நேரு, காந்தி வீதியில் குவிந்த மக்கள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று காந்தி வீதி மற்றும் நேரு வீதியில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர்.புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளர்வுகளுக்கு பிறகு, தற்போது, இரவு 8.00 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடற்கரை சாலையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் குறையவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொது இடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், இவற்றை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருவதால் தொற்று மேலும் பரவி வருகிறது.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சண்டே மார்க்கெட் நடைபெறும் காந்தி வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல், நேரு வீதியிலும் மக்கள் அதிக அளவில் குவிந்து பொருட்கள் வாங்கினர். புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X