இந்தியா

வீடுவீடாக சென்று 569 பேரிடம் உமிழ்நீர் பரிசோதனை: கலெக்டர்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று வீடு விடாக சென்று 569 நபர்களிடம் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது என கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று 131 கட்டுப்பாட்டு பகுதிகளில் 5,748 நபர்கள் பற்றியும், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே 2,706 நபர்கள் பற்றிய கொரோனா கணக்கெடுப்பு நடந்தது.மேட்டுப்பாளையம், கொசப்பாளையம், முத்தியால்பேட்டை, குருவிநத்தம், பாகூர், ரெட்டியார்பாளையம், தவளக்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட பகுதி களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 569 நபர்களின் உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X