சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல் 9 பேர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

பள்ளிக்கரணை: பெரும்பாக்கத்தில், இரு கோஷ்டிகள் இடையே நடந்த மோதலில், நான்கு ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக, ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சல்மான் ஷேக், 25, வல்லரசு, 20. இருவரும், அதே பகுதியில், இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர்.கடந்த, 11ம் தேதி, சல்மான் ஷேக் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு, வல்லரசு சென்றதாக கூறப்படுகிறது. இதில், இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அன்று இரவு, 'எங்க ஏரியா உள்ளே வராதே; வந்தால் வெட்டுவோம்' என, இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் மாறி, மாறி பேசியதுடன், கை கலப்பில் ஈடுபட்டனர்.ஆத்திரமடைந்த கும்பல், உருட்டு கட்டை, கல்லால் சாலை ஓரம் நின்ற, நான்கு ஆட்டோக்களை சேதப்படுத்தினர். பள்ளிக்கரணை போலீசார், இரு கோஷ்டிகளைச் சேர்ந்த, ஒன்பது பேரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X