சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., மையத்தில் நூதனம்; பெண்ணிடம் ரூ.33 ஆயிரம் சுருட்டல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருத்தணி : இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணத்தை எடுத்து தருவதாக, மர்ம நபர் கூறி, நுாதன முறையில், 33 ஆயிரம் ரூபாயை எடுத்து தப்பினார்.

திருத்தணி அடுத்த, மாம்பாக்கசத்திரம், இருளர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி திவ்யாபாரதி, 25. இவர், இரு நாளுக்கு முன், திருத்தணி ம.பொ.சி. சாலை, இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் எடுக்க வந்தார்.அங்கிருந்த மர்ம நபர், திவ்யாபாரதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டை வாங்கி, கார்டின் பின்புறம் எழுதிய ரகசிய நான்கு எண்களை பார்த்து, இயந்திரத்தில் கார்டை செலுத்தி, 'மினி ஸ்டேட்மென்டை' எடுத்து, இந்த ஏ.டி.எம்.,மில் பணம் இல்லை.

நீங்கள் வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் கூறி, மர்ம நபர், மற்றொரு ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார்.அந்த பெண் வெளியே சென்றதும், சில வினாடிகளில் திவ்யாபாரதியின் ஏ.டி.எம்.,கார்டை பயன்படுத்தி, 33 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர் எடுத்துக் கொண்டு தப்பினார்.சில நிமிடங்களில் திவ்யாபாரதியின் மொபைல் போன் எண்ணுக்கு, 33 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தாக குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து, திவ்யாபாரதி வங்கியின் கிளை மேலாளாரை அணுகிய போது, சரியான பதில் இல்லை. இதையடுத்து, திவ்யாபாரதி, திருத்தணி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X