பொது செய்தி

தமிழ்நாடு

மாணவியின் 'நீட்' தேர்வுக்கு உதவிய போலீசுக்கு பாராட்டு

Added : செப் 14, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
மாணவியின் 'நீட்' தேர்வுக்கு உதவிய போலீசுக்கு பாராட்டு

கும்மிடிப்பூண்டி : சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, 'நீட்' தேர்வு எழுத சென்றார்.

ஒரிஜினல் ஆதார் அட்டை எடுக்காமல், அதன் நகலை மட்டும் எடுத்து சென்றதால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆதார் எண்ணுடன், மொபைல் போன் எண் இணைக்கப்படாததால், 'ஆன்லைன்' வழியாக, ஒரிஜினல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்ததால், வீட்டிற்கு சென்று எடுத்து வர நேரமின்றி, என்ன செய்வது என்று தெரியாமல் மவுனிகாவும், அவரது தாய் ஷீலாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.அதைக்கண்ட கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ரமேஷ், ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய காவலர் மகேஷ்வரனை, 24, உதவிக்கு அனுப்பினார். அவர், தாய் ஷீலாவை, பைக்கில் ஏற்றிக் கொண்டு, புரசைவாக்கம் நோக்கி சென்றார்.

மாணவியின் தாயை, அவரது வீட்டில் இறக்கி விட்டு, ஒரிஜினல் ஆதார் அட்டையை பெற்றுக்கொண்டு, தேர்வு மையம் நோக்கி, மகேஷ்வரன் திரும்பினார்.மதியம், 2:00 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில், 1:30 மணிக்கு ஆதார் அட்டையை மாணவியிடம் ஒப்படைத்தார்.

மருத்துவ கனவு

உற்சாகமாக தேர்வு எழுதிய மாணவி மவுனிகாவை, மகேஷ்வரன் தன் பைக்கில் அழைத்து சென்று, வீட்டில் இறக்கி விட்டார்.'மாணவியின் மருத்துவ கனவிற்கு, என்னால் முடிந்த உதவியை செய்தேன்' என, காவலர் மகேஷ்வரன் கூறினார். மனிதாபிமானத்துடன் உதவிய அவரது செயலுக்கு பாராட்டு குவிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-செப்-202017:08:01 IST Report Abuse
இந்தியன் kumar ஏராளமான மாணவர்கள் மிகுந்த உட்சாகத்துடன் தான் நீட் தேர்வை எழுதுகின்றனர். , கடுமையான முயட்சி இருந்தால் வெற்றி நிச்சயம்
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-செப்-202017:06:27 IST Report Abuse
இந்தியன் kumar இறைவன் தான் மனித வடிவில் உதவி புரிவான் . பிறருக்கு நல்லது செய்யுங்கள் உங்களுக்கு நன்மை தான் நடக்கும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-செப்-202013:26:49 IST Report Abuse
A.George Alphonse உண்மையாக DSP அவர்களைத்தான் பாராட்ட வேண்டும்.அவர் உத்திரவு கொடுத்ததால் தான் இந்த காவலர் துரிதமாக செயல் பட்டு அந்தகுழந்தையை நீட் தேர்வு நல்லபடி எழுத வை த்தது. இதுபோன்ற மனித அபிமானம் உள்ள காவலர்களால்தான் தான்"காவலர்கள் நமது நண்பர்கள்"என்ற வார்த்தைகள் உண்மை என்று மக்களுக்கு தெரிகிறது.
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )ஐயா கஷ்டமான நேரத்தில் யாருக்கும் உதவி செய்வதற்க்கு யாரோட உத்தரவும் தேவையில்லை இது மனிதாபிமானம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X