அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கூறியது நீதிமன்ற அவமதிப்பு: அண்ணாமலை

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
Annamalai, BJP, Stalin, MK Stalin, DMK

சென்னை: ''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, சட்டத்திற்குட்பட்ட கருத்து அல்ல. இந்த கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும்,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர், அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது; தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு உள்ளது. கடந்த, 2013ல் நீட் தேர்வு ஆலோசனை நடந்தபோது, டில்லியில் இருந்த அரசு, கூட்டணியில் இருந்த கட்சிகள் குறித்து பேச வேண்டும். தற்போது, நான்கு ஆண்டுகள் கழித்து, நீட் தொடர்பாக பேசுகிறோம். இதற்கு, பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.


latest tamil news


தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதாக, ஸ்டாலின் கூறுவது, சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல.இது, நீதிமன்ற அவமதிப்பு. அவர் இப்படி கூறாமல் தவிர்த்திருக்கலாம். நீட் தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு சென்றபோது, மாநில சுயாட்சி குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டது. அனைத்தையும் ஆராய்ந்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானதல்ல.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இல்லை. தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு உள்ளது. கல்வி வணிகமாக மாறியதை உடைக்கத்தான், புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து, யாருடனும் விவாதிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-செப்-202005:58:11 IST Report Abuse
meenakshisundaram சில சமயம் சில நீதிபதிகளே ஒய்வு பெட்ர போதோ அல்லது பதவியில் உள்ளபொழுதோ நேரடி அல்லது மறைமுக அரசியல் கருத்துக்களை சொல்வது இப்போ சகஜம் ஆகிட்டது .சட்டம் வளைக்கப்படுகிறதா ?
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-செப்-202020:57:16 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN திமுகவிற்கு நம்பிக்கை எப்படீன்னா ஏமாளி மக்கள் ஒருநாள் கூலி கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவாரகள் தற்போது மூன்று நாள் கூலி கொடுத்து ஓட்டை வாங்கிடலாம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் கூறுகிறார். திருமிகு மாரிதாஸ் திமுக வண்ட வளங்களை புட்டுபுட்டு ஆதாரத்துடன் கூறிவருகிறார் அவர் ஓர் சிறந்த இந்திய நாட்டு சமூக நல பேராசிரியராவார். அவரின் உழைப்பு ஆளுமை பணி வீண்போகால் இறைவன் துணை இருப்பாராக. ரௌடிகள் கட்சி ஒழியட்டும் அதற்கு மக்கள் மனம் வைக்கனும். ஓட்டை விற்காமல் நல்லவருக்கு அளித்தால் நாடும் வீடும் நலமெய்தும்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
14-செப்-202018:31:37 IST Report Abuse
madhavan rajan மத்திய அரசை மக்களின் கருத்தை கேட்டார்களா என்று பலமுறை சுடலை கேட்டிருக்கிறார். இவருடைய கட்சியும், காங்கிரசும் மத்தியில் ஆண்டபோது மக்களை கேட்டா நீட் தேர்வை கொண்டுவந்தார்கள்? அப்போது கேட்கவில்லை என்றால் இப்போது இவர் எப்படி மத்திய அரசை பல திட்டங்கள் மக்களை கேட்டு கொண்டுவரவில்லைன் என்று குற்றம் கூறமுடியும்? அப்போது இவர்கள் மக்களை கேட்டு கொண்டுவந்திருந்தால் இப்போது எதற்கு எதிர்க்கிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X