பொது செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மாணவி 'நீட்' தேர்வு எழுதினார்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
NEET exam,medical entrance test,நீட்

மூணாறு : மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மாணவி ஹேமலதா நேற்று 'நீட்' தேர்வு எழுதினார்.

மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஆக.6ல் ஏற்பட்ட நிலச்சரிவில் கணேசன், மனைவி தங்கம் இறந்தனர். மகள்கள் ஹேமலதா, கோபிகா கல்விக்காக திருவனந்தபுரத்தில் இருந்ததால் உயிர் தப்பினர். அங்கு ஹேமலதா தமிழ் வழி பிளஸ்-2 முடித்து 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்தார். கோபிகா பிளஸ்- 2 படித்தார்.

பெற்றோர் இறப்பு குறித்து அறிந்து இருவரும் மூணாறுக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கினர். இருவரும் பெற்றோர் தவிர பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தினர் உட்பட உறவினர்கள் 33 பேரை நிலச்சரிவில் பறிகொடுத்தனர். மீளாத்துயரில் இருந்த ேஹமலதா கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தல்லப்பாடி தனியார் பள்ளியில் நேற்று 'நீட்' தேர்வு எழுதினார். தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை மூணாறு, கோட்டயம் பகுதி தமிழ் சங்கத்தினர் செய்தனர்.-----

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
alex - ooty,இந்தியா
15-செப்-202008:29:43 IST Report Abuse
alex தனது பெற்றோர்களையும் சொந்தங்களையும் இழந்தும் நீட் தேர்வில் பங்கு பற்றிய இந்த சகோதரியின் மனதில் எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் இந்த தேர்வில் பங்கு பெற வேணும் என்று பெற்றோர்கள் விரும்பி படிப்பித்து இருப்பார்கள். இந்த சகோதரி நிச்சயம் நல்ல மார்க்குகள் பெற்று நல்லதொரு டாக்டராக வர எல்லாம் வல்ல கடவுள் அருள் புரியட்டும்.கடவுளின் துணை உங்களுக்கு கிடைக்கும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-செப்-202017:57:05 IST Report Abuse
Malick Raja தமிழ்மகள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் ..
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-202012:51:17 IST Report Abuse
Yaro Oruvan வாழ்த்துக்கள் சகோதரி.. உனது ஆசை நிறைவேறும் என நம்புகிறேன் - இந்த இக்கட்டான தருணத்தில் தேர்வு எழுதுவது கடினம்.. உனது முயற்சி வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X