தேசியம் - பேட்டி

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேசியம் - பேட்டி

அவமதிக்க சதி!

மஹாராஷ்டிரா மாநிலத்தை அவமானப்படுத்த, திட்டமிட்ட சதி நடக்கிறது. கொரோனாவை எதிர்த்தும் போராடுவேன்; அரசியல் புயல்களையும் எதிர்கொள்வேன். நான் இதுவரை மவுனம் காத்ததற்கு, என்னிடம் பதில் இல்லை என அர்த்தமல்ல. அரசியல் ரீதியாக பதில் அளிக்க, முதல்வர் என்ற முக கவசத்தை நான் நீக்குவேன்.

- உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா.

ஆக்சிஜன் பற்றாக்குறை!

கொரோனா வைரசை எதிர்கொள்வதில், மத்திய பிரதேசத்தில், 'ஆக்சிஜன்' பற்றாக்குறை உள்ளது. இதையடுத்து, நான் விடுத்த வேண்டு கோளை ஏற்று, தினமும், 50 டன் ஆக்சிஜன் வழங்க, மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ளது. இதனால், மாநிலத்தில், தினமும் ஆக்சிஜன் கையிருப்பு, 180 டன்னாக அதிகரிக்கும். இதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

-சிவராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,

மோடியின் பிடிவாதம்!

தன் முதலாளித்துவ நண்பர்கள் மீது கொண்ட அக்கறை போல, 'ஜே.இ.இ., - நீட்' மாணவர்கள் மீதும் பிரதமர் மோடி, மிகவும் அக்கறை கொண்டுள்ளார் போலும்! அதனால் தான், கொரோனா பரவலிலும், நீட் தேர்வு நடத்துவதில் அவர் பிடிவாதமாக இருந்தார். கொரோனா தொற்று மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, நீட் தேர்வு எழுதாதவர்களுக்கு, என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

- ராகுல், எம்.பி., காங்கிரஸ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-செப்-202012:28:54 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கிரிமினல்கள் கூடாரம் மும்பை என்பது உலகமறிந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X