பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு: 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில், எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய ஆந்திர கடற்பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில், ஆந்திராவை நோக்கி இன்று நகர வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலின் சில இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 48 மணி நேரத்தில், வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சராசரி வெப்பநிலை அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸாக பதிவாகும்.தென் மேற்கு அரபி கடல் பகுதிகளில், வரும், 17ம் தேதி வரையிலும், தென் மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், இன்று வரையிலும், மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில்,நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, சின்னக்கல்லாரில், 5; வால்பாறை, சோலையார், காட்பாடி, தேவாலாவில் 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X