பொது செய்தி

இந்தியா

47 லட்சத்தை கடந்தது பாதிப்பு; 77.88 சதவீதம் பேர் மீண்டனர்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 47 லட்சத்தை கடந்தது பாதிப்பு; 77.88 சதவீதம் பேர் மீண்டனர்

புதுடில்லி : நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 47.54 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில், 77.88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின், நேற்றைய அறிக்கை:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, நேற்று வரை, 5.62 கோடிக்கும் மேலானோரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.


தொடர் சிகிச்சை


கடந்த, 24 மணி நேரத்தில், 10.72 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் முடிவில், 91 ஆயிரத்து, 372 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, 47.54 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில், 9.73 லட்சம் பேர், தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் தொடர் சிகிச்சை வாயிலாக, வைரஸ் பாதிப்பில் இருந்து, 37.02 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 77.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், வைரஸ் தொற்றால், 1,114 பேர் இறந்துள்ளனர். இவர்களில், மஹா.,வில், 391 பேரும், கர்நாடகாவில், 94; தமிழகத்தில், 76; ஆந்திரம் மற்றும் உ.பி.,யில், தலா, 67 பேரும் இறந்துள்ளனர். மே., வங்கத்தில், 59; ம.பி.,யில், 37; டில்லியில், 28; ஹரியானாவில், 24; அசாமில், 23, சத்தீஸ்கரில், 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுடன், நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை, 78 ஆயிரத்து, 586 ஆக உயர்ந்துள்ளது; ஆனாலும், இறப்பு விகிதம், 1.65 சதவீதமாக குறைந்துள்ளது.தமிழகம் இரண்டாமிடம்பலி எண்ணிக்கையில், 29 ஆயிரத்து, 115 பேருடன் மஹா., முதலிடத்தில் உள்ளது. தமிழகம், 8,307 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா, 7,161 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

அடுத்ததாக, ஆந்திராவில், 4,846; டில்லியில், 4,715; உ.பி.,யில், 4,349 பேர் இறந்துள்ளனர். மே., வங்கத்தில், 3,887; குஜராத்தில், 3,195; பஞ்சாபில், 2,288; ம.பி.,யில், 1,728 பேரும் இறந்துஉள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு இல்லை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், இறப்பு எண்ணிக்கையும் உயர்கிறது.

இதனால், வரும், 25ம் தேதி முதல், 46 நாட்களுக்கு, நாடு முழுதும், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசிடம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தி உள்ளதாக, தகவல்கள் வெளியாயின. ஆனால், முழு ஊரடங்கை மீண்டும் அமல் படுத்துவது தொடர்பான தகவல்களில், உண்மை இல்லை என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X