சட்டம் பயில விரும்பும் மூதாட்டி; வயது வரம்பை எதிர்த்து வழக்கு

Added : செப் 14, 2020
Share
Advertisement
சட்டம் பயில விரும்பும் மூதாட்டி; வயது வரம்பை எதிர்த்து வழக்கு

புதுடில்லி : சட்டக் கல்லுாரிகளில் சேருவதற்கான வயது உச்சவரம்பை எதிர்த்து, சட்டம் பயில விரும்பும், 77 வயது மூதாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சட்டக் கல்லுாரிகளில் சேருவதற்கு, இந்திய பார் கவுன்சில் சார்பில், மாணவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனுமதி மறுப்புஇதன்படி, ஐந்து ஆண்டு படிப்பில் சேர, 20 வயதும், எல்.எல்.பி., எனப்படும் மூன்றாண்டு படிப்பில் சேர, 30 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. உ.பி.,யின் சாஹிபாபாத் நகரை சேர்ந்த, ராஜ்குமாரி தியாகி, 77, என்ற மூதாட்டி, சட்டம் படிக்க விரும்பிய நிலையில், வயது காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வயது உச்சவரம்பிற்கு எதிரான வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், கூறப்பட்டு உள்ளதாவது:கணவரின் மறைவுக்கு பின், அவரது தோட்டங்களை பராமரித்து வருகிறேன். அந்த சொத்து தொடர்பான சட்ட பிரச்னைகளில், வழக்கறிஞர் துணையின்றி தீர்வு கண்டுள்ளேன்.இதனால், சட்டம் படிக்க வேண்டும் என, விருப்பம் ஏற்பட்டது. இதற்கு, பார் கவுன்சில் விதிகள் எதிராக உள்ளன.


அடிப்படை உரிமை


இந்திய அரசியல்அமைப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடிமகனும், எந்த ஒரு தொழிலை மேற்கொள்ளவும், அதற்கான கல்வியை பெறவும் உரிமை உள்ளது.எனக்கு விருப்பமான கல்லுாரியில், சட்டக் கல்வி பயில்வதற்கான அடிப்படை உரிமையை மறுப்பது, விதிகளுக்கு எதிரானதாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, இந்த மனுவும் எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X