பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் வார்டு வரையறை

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : வார்டு வரையறை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இந்தாண்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், 27 மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2019 டிசம்பரில், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.'மீதமுள்ள மாவட்டங்களில், வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின், ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இப்பணிகளில், ஜனவரி முதல், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியது.

ஊரடங்கு காரணமாக, மார்ச்சில் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் நடக்கவிருந்த, கருத்து கேட்பு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டசபை கூட்டம் இன்று நடக்கவுள்ளது. காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், தமிழக தேர்தல் ஆணையம் அமைதி காத்து வருகிறது.

மாவட்ட துணை தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, பல இடங்களில் மறைமுக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.இதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகள் இந்தாண்டு முழுமை பெறுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X