பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு 5 லட்சமாக உயர்வு

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 5.02 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில், 4.47 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 168 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 84 ஆயிரத்து, 308 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப் பட்டன; அவற்றில், ௫,௬௯௩ பேருக்கு தொற்று உறுதியானது. அதில், சென்னையில், 944; கோவையில், 490; சேலத்தில், 309; திருவள்ளூரில், 300; செங்கல்பட்டில், 299; திருப்பூரில், 291; கடலுாரில், 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் முதல் இதுவரை, 58.88 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், ஐந்து லட்சத்து, ௨,759 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 21 ஆயிரத்து, 850 பேர்; 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 65 ஆயிரத்து, 692 பேர். மாவட்ட வாரியாக சென்னையில், ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 584; செங்கல்பட்டில், 30 ஆயிரத்து, 366; திருவள்ளூரில், 28 ஆயிரத்து, 325; கோவையில், 22 ஆயிரத்து, 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, 5,717 பேர் உட்பட,நான்கு லட்சத்து, 47 ஆயிரத்து, 366 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, 47 ஆயிரத்து, 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை, 8,381 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும், 2,976 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X