முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் சிங் காலமானார்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் சிங் காலமானார்

புதுடில்லி : பீஹார் மாநில மூத்த அரசியல்வாதியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் இருந்து சமீபத்தில் விலகியவருமான, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் சிங், 74, நேற்று டில்லியில் காலமானார்.

பீஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவிற்கு நெருக்கமானவராக இருந்தவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். பார்லி.,யில், 'மைக்'கே தேவையில்லாமல், அனைவருக்கும் கேட்கும் வகையில், 'கணீர்' குரலில் பேசுவதில் வல்லவர். முன்னாள் மத்திய கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சரான ரகுவன்ஷ் சிங், சமீபத்தில், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் இருந்து விலகினார்.


உடல்நலக்குறைவு


மேலும், ஐக்கிய ஜனதா தள கட்சியில், ரகுவன்ஷ் இணையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக, அவரின் உடல்நிலை மோசமாகவே இருந்தது. 'வென்டிலேட்டர்' உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை, 11:௦௦ மணிக்கு, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


தலைவர்கள் இரங்கல்


கடந்த ஜூனில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ரகுவன்ஷ் சிங் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X