அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாணவர்கள் உயிருடன் விளையாடும் ஸ்டாலின்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர் : ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மாணவர்களின் உயிர், உணர்வோடு விளையாடுகிறார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம், பூலுவபட்டியில் நேற்று நடந்தது.இதில், பங்கேற்ற முருகன் கூறியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அனைத்து விஷயங்களிலும் அரசியல் செய்யக்கூடாது. 'நீட்' மாணவர்களின் அச்ச உணர்வை, தவறாக திசை திருப்பவும், அவர்களை பயமுறுத்தவும் கூடாது. நீட் தேர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், நாடு முழுக்க நடக்கிறது.கடந்த, 2016 சட்ட சபை தேர்தலில், பா.ஜ., 75 இடங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தான், தற்போது, 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X