பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: மதுரை டிஸ்சார்ஜ் 14 ஆயிரத்தை கடந்தது

Added : செப் 14, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை மாவட்டத்தில் கொரோனாவிடம் மீண்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.

மதுரை 84மதுரையில் நேற்று 84 பேர் குணமடைந்தனர். இதுவரை 14,043 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ௨ டாக்டர்கள், ௨௦ மருத்துவ ஊழியர்கள் உட்பட புதிதாக 78 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 15,310 ஆக உயர்ந்தது. 892 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 4 பேர் பலியானதால், இறப்பு 375 ஆக அதிகரித்தது.திண்டுக்கல் 95திண்டுக்கல்லில் நேற்று ஒரே நாளில் 95 பேர் குணமடைந்தனர். மொத்தம் 6367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 14 பெண்கள், 7 முதியவர்கள், 2 சிறுவர்கள் உட்பட 68 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது.

இதில் பெண் தலைமைக்காவலர் அடங்குவார். மொத்த பாதிப்பு 7869 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 762 பேர் சிகிச்சையில் உள்ளனர். நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டி 64 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார்.தேனி 85தேனி மாவட்டத்தில் நேற்று 85 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 12,832 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று புதிதாக 88 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 13,775 ஆக உயர்ந்தது.தேனி பங்களாமேடு 75 வயது முதியவர், பாரஸ்ட் ரோடு சிவாஜிநகர் 57 வயது ஆண், சின்னமனுார் ஓடைத்தெரு 70 வயது முதியவர், மதுரை 80 வயது முதியவர் என 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

பலி 228 ஆக உயர்ந்தது. ராமநாதபுரம் 73ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 73 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். 16 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். மொத்தம் 5181 பேர் பாதிக்கப்பட்டதில் இதுவரை 4824 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 244 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 113 பேர் பலியாகியுள்ளனர்.சிவகங்கை 17சிவகங்கையில் கொரோனா குணமான 17 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். காரைக்குடி, இளையாத்தன்குடி, சிவகங்கையை சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டனர்.விருதுநகர் 17விருதுநகரில் நேற்று 17 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 35 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதுவரை 13 ஆயிரத்து 683 பேர் பாதிக்கப்பட்டதில் 13 ஆயிரத்து 045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 202 பேர் பலியாகி உள்ளனர்.திருநெல்வேலி 142திருநெல்வேலியில் நேற்று 142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 9866 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 126 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11131 ஆனது. தற்போது 1072 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 193 பேர் இறந்துள்ளனர்.தென்காசி 89தென்காசியில் நேற்று 89 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 5591 பேர் குணமடைந்தனர். நேற்று 28 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6260 ஆனது. தற்போது 553 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 116 பேர் இறந்துள்ளனர்.

துாத்துக்குடி 62துாத்துக்குடியில் நேற்று 62 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 11500 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 45 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 12300 ஆனது. தற்போது 681 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 119 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X