அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., 'மாஜி'க்கு மாலை அமைச்சர் அசத்தல் வரவேற்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கோபி : அரசு விழாவில், தி.மு.க., 'மாஜி' அமைச்சரை மாலை அணிவித்து வரவேற்ற அமைச்சர், குத்து விளக்கும் ஏற்ற வைத்தது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1.27 கோடி ரூபாயில் கட்டடம் கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சி துவங்கும் சமயத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜா வந்தார்.அதே சமயம், நிகழ்ச்சியை துவக்கி வைக்க, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் வந்தனர். ராஜாவுக்கு மாலை அணிவித்து, அமைச்சர் கருப்பணன் வரவேற்றார். மேலும், பூமி பூஜை நிகழ்வில், அமைச்சர் கருப்பணன், தீக்குச்சியை உரசித் தர, அதை பெற்றுக் கொண்ட ராஜா, குத்து விளக்கேற்றினார்.

இரு அமைச்சர்களும், ராஜாவிடம் சகஜமாக பேசினர். ராஜா கூறுகையில், ''அய்யம்பாளையம் கிராமம், எனக்கு சொந்த ஊர் மாதிரி. பள்ளி வளர்ச்சிக்காக, ௨ லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X