சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பி கொலை: அண்ணன் சரண்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர், மனோகரன், 59; கட்டட தொழிலாளி.

இவருக்கு, சங்கர், 29, தினேஷ், 20, உட்பட மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.சங்கருக்கு மதுப் பழக்கம் உள்ளதால், அவரது மனைவி, மூன்று மாதங்களுக்கு முன், பிரிந்து சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலை, சங்கர் போதையில் வீட்டுக்கு வந்தார்.தந்தை மற்றும் தம்பி தினேஷ், அவரை கண்டித்தனர். ஆத்திரம்அடைந்த சங்கர், நேற்று காலை, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து, தினேஷ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் பலியானார். கருங்கல்பாளையம் போலீசில், சங்கர் சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X