அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் துவங்கும் பணி துவக்கம் ; அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் துவங்கும் பணி துவக்கம் ; அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை : ''முதல்வர் அறிவித்த, 2,000 மினி கிளினிக்குகள் துவங்கும் பணி நடந்து வருகிறது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான். முதல்வரின் வழிகாட்டுதலின் படி, அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், தமிழகம் முன்னணியில் உள்ளது.தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த, முதல்வர் அறிவித்த, 2,000 மினி கிளினிக்குகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கி விட்டன.ஒவ்வொரு மினி கிளினிக்கிலும், ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு பாராமெடிக்கல் பணியாளர் இருப்பர்.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த, நான்கு தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-செப்-202011:45:22 IST Report Abuse
Lion Drsekar பெரிய கிளினிக்குகள் காஞ்சிபுரம் அத்திவாரதர்போல் கொரோனா அள்ளிக்கொடுத்து விட்டது, அடுத்து மினி க்ளினிக்குகள், வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வாழ்க , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X