பிரிட்டன் பிரதமருக்கு 'மாஜி'க்கள் எதிர்ப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement
 பிரிட்டன் பிரதமருக்கு 'மாஜி'க்கள் எதிர்ப்பு

லண்டன் : 'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக, பிரதமர், போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்துள்ள மசோதாவுக்கு, முன்னாள் பிரதமர்களான, டோனி பிளேர் மற்றும் ஜான் மேஜர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுக்கான, ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறிஉள்ளது.இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் மற்றும் மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவுகள் மேற்கொள்வது தொடர்பாக, பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் புதிய மசோதாவை, பார்லி.,யில் தாக்கல் செய்துள்ளார்.

பார்லி.,யில் இது தொடர்பாக இன்று விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், ஜான் மேஜர், எதிர்க்கட்சியான லேபர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், டோனி பிளேர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில், இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் அவர்கள் கூறியுள்ளதாவது:ஐரோப்பிய யூனியனுடன் எதிர்கால வர்த்தக உறவுகள் மேற்கொள்ளும்போது, அதில் பிரச்னை ஏற்பட்டால், அதற்கு தீர்வு காணும் வகையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தில் வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஆனால், அதை மீறும் வகையில், ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக சில அம்சங்கள், புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இது, பிரிட்டன் மீதான நம்பகத்தன்மையை குலைத்துவிடும் அபாயம் உள்ளது. மக்களின் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமல், பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னிச்சையாக இந்த முடிவுகளை எடுத்துள்ளார். இதற்கு, எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கட்டுரையில் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X