ராணிப்பேட்டை : 'நீட்' தேர்வு எழுத பயந்து, அளவுக்கதிமாக மாத்திரை சாப்பிட்டு, மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், பாரதி நகரைச் சேர்ந்தவர் ரவிசேகர், 65; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் சவுமியா, 19; சென்னையில் தனியார் பள்ளியில் படித்தவர், 2018ல் பிளஸ் 2 தேர்வில், 400 மதிப்பெண் பெற்றார்.இந்தாண்டு, 'நீட்' தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்தார். வேலுார் மாவட்டம், காட்பாடியில் நேற்று தேர்வு எழுத இருந்தார். கடைசி நேரத்தில் பயந்த மாணவி, அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடித்தார்.மயங்கி விழுந்த அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவி நலமுடன் இருப்பதாக, டாக்டர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE